டிசம்பர் 27, 2012

அஞ்சல் குறியீட்டு எண் - வைத்து ஊரை கண்டு பிடிக்கலாம்

240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம் இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்
குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின் பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்,இந்த சிறப்புப் பதிவு.அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு
நாட்டு அஞ்சக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en


படம் 2

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு
என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்
நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)
கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும். உடனடியாக
சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது. வரும்
முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி
மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்
தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்
இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து
தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது.
 
நன்றி: முகநூல்

டிசம்பர் 17, 2012

பாவ நிவாரணப் பண்டிகை

 
லேவியராகமம்: 23:29-32

ஏழாம் மாதம் 10 ம் தேதியில் பாவ நிவாரண நாள் வருகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாருக்கும் இந்த நாள் மிகவும் பயபக்திக்குரிய நாளாகும்.

முழு வருடத்திலும் இந்த ஒரே ஒரு தினத்தில் மட்டுமே பிரதான ஆசாரியன் தேவாலயத்தின் திரைச்சீலையின் வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்துக்கடந்து, நடந்து முடிந்த ஆண்டு முழுவதும் எல்லா மக்களும் செய்த பாவங்களுக்காக முழு பாவ நிவாரணம் செய்வான். 

பாவ நிவாரணநாள் "பாவத்தை அகற்றும் நாள்". ஒரு நிறைவு பெற்ற பாவ நிவாரணமாக இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் நமக்காக ஜீவனை ஈந்தார். ஆனால், திருச்சபையோ பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலையாகி இந்த அனுபவத்தில் தொடர்ந்து நடக்கக் காணோம்.

பாவ நிவாரண நாளில் சிந்தப்படும் இரத்தத்துக்கும்  இரட்சிப்புக்கும் சம்பந்தமில்லை. பஸ்கா அவர்களுடைய பாவத்தோடு இடைபடாமல் பாவத்தை இரத்தத்தால் அப்படியே மூடிப்போட்டது. ஆனால், பாவ நிவாரணத்தில் சிந்தப்பட்ட இரத்தமோ இஸ்ரவேலரின் பாவங்களை முற்றிலும் கழுவி சுத்தப்படுத்தினது.

கூடாரப்பண்டிகைக்கு முன்பாக ஆசரிக்கப்படும் பண்டிகையே பாவ நிவாரணப் பண்டிகை. தேவனுடைய சரீரமாகிய சபை எப்படி கழுவப்பட்டு  பூரணத்தை நோக்கி கடந்து செல்ல வேண்டும் என்பதை இந்த பண்டிகை தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறது.

நீதிமொழிகள்: 4:18 - "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்"

பாவ நிவாரண நாளில் ஆசரிப்பு:  (லேவியராகமம்: 16:4)

1. பிரதான ஆசாரியனுடைய வஸ்திரங்கள்: (லேவி: 16:4)

பாவ நிவாரண தினத்தன்று பிரதான ஆசாரியன் தன் மகிமையும், அலங்காரமுமான வஸ்திரங்களை களைந்துவிட்டு, அதற்குப் பதிலாக பரிசுத்தமான சணல் நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்கு  சணல் நூல் சல்லடையைப் போட்டு, சணல் நூல் இடைக் கச்சையைக் கட்டி, சணல் நூல் பாகையைக் காத்துக் கொள்ள வேண்டும்.

சணல் - நீதியைக் குறிக்கும்.

2. திரைச் சீலைக்குள்ளே :  (லேவி: 16:2) 

திரைச்சீலையானது பரிசுத்தஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கிறது. வருடத்தில் வரும் ஒரே ஒரு நாள் இந்த பாவ நிவாரண தினத்தில் மட்டுமே பிரதான ஆசாரியன், திரைச்சீலையின் வழியாக மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செக்கின்னா மகிமைக்குள் நிறைந்திருக்கும் தேவ பிரசன்னத்தில் பிரவேசிப்பான். (எபிரேயர்: 9:7-9; 10:19,20; 6:19,20) கர்த்தரின் கிருபாசனத்தண்டையிலே 2 கேரூபீன்கள் மத்தியில் ஒரு மேகத்தில் தோன்றுவார்.

எந்த இஸ்ரவேலனாவது, எந்த நேரத்திலாவது அங்கு பிரவேசித்து விட்டால் அவன் அங்கு தானே மரித்து விடுவான்.

3. பலியின் காளை:  (லேவி: 16:6,11-14)

 பிரதான ஆசாரியனாகிய ஆரோன் சகல ஜனங்களின் பாவ நிவாரணத்துக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் முன்பு, தன்னுடைய சொந்த பாவங்களுக்காக முதலில் பரிகாரம் தேட வேண்டும்.  தனது பாவங்களுக்காக முதலில் ஒரு காளையை பலி செலுத்துவான். பின் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து அடிக்கப்பட்ட அந்த காளையின் இரத்தத்தை உடன்படிக்கைப் பெட்டியின் முன்பாக திரையிலும் கிருபாசனத்திலும் தெளிப்பான். 

4. இரண்டு வெள்ளாட்டுக் கடாக்கள்: (லேவியராகமம்: 16:5-10,20-22)

ஜனங்களால் கொண்டு வரப்பட்ட இரண்டு ஆடுகள் மேல் பிரதான ஆசாரியன் சீட்டுப் போடுவான். ஒன்று கர்த்தருக்கென்று தெரிந்து கொள்ளப்படும். மற்றது போக்காடாக விடப்படும்.

கர்த்தருடைய ஆடு:

கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக் கடாவை பாவ நிவாரண பலியாக சேரப் பண்ணுவார்கள். அந்த இரத்தம் திரைச் சீலைக்குள் கொண்டு செல்லப்பட்டு, கிருபாசனத்திற்கு முன்பு ஒருமுறை தெளிக்கப்படும். இப்படியாக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பாவப் பரிகாரம் செய்யப்படும்.

போக்காடு:

பிரதான ஆசாரியன் தன் கைகளை ஆட்டின் மீது வைத்து, இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களை அதன் மீது சுமத்துவான். அப்பொழுது அந்தப் பாவங்கள் ஆட்டின் மீது இறங்கும்.

(கவனியுங்கள்: உங்கள் தலையின் மீது கைவைத்து ஜெபிக்கிறவர்கள் எப்படிப்படட்டவர்கள் என்பதைக் குறித்து மிக கவனமாயிருக்க வேண்டும்.)

ஜீவனுள்ள அந்த ஆடு வனாந்திரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அது போக்காடாக விடப்படும். மக்களுடைய பாவங்களை சுமப்பதற்கு இது அடையாளம். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்வாறு சுத்திகரிக்கப்படுகிறார்கள். 

குறிப்பு: இரட்சிப்புக்காக கிறிஸ்துவண்டை வரும் பாவிக்கு கிடைக்கும் பாவமன்னிப்பு அல்லது பாவ நிவாரண தினத்தன்று கர்த்தர் தமது ஜனத்தின் பாவத்தோடே இடைப்பட்டு பாவங்களை கழுவி சுத்திகரிக்கிறார்.

5. தாழ்மைப்படுத்தும் நாள்:  லேவியராகமம்: 16:31,23,27)

ஏழாம் மாதம் பத்தாம் தேதியில் இந்தப் பரிகாரம் செய்யப்படும். 10 என்பது சோதனை, பாடுகள், துயரங்களைக் குறிக்கும். (தானியேல்: 1:12; வெளிப்படுத்தல்: 2:10)  இஸ்ரவேல் ஜனங்கள் 10 விதமான சோதனைகளுக்குள்ளாய் வனாந்திரத்தில் கடந்து சென்றார்கள். பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் சீஷர்கள் 10 நாட்கள் சோதிக்கப்பட்டார்கள்.

கர்த்தர் நம்மைச் சுத்திகரிக்கவும், பூரணப்படுத்தவும் அநேகப் பாடுகள், சோதனைக்கூடாய் நடத்துகிறார். ஒவ்வொரு சோதனையும் இன்னும் பெரிய சோதனைகளுக்குள்ளும், பாடுகளுக்குள்ளும் கொண்டு செல்கிறது. (எரேமியா: 2:6). பாடுகளின் வழியாகக் கடந்து பரிசுத்தத்தில் முன்னேறக்கூடிய காட்சி இது. இப்படிப்பட்ட அனுபவங்கள் வழியாக சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கைக்குள் கடந்து செல்லுகிறோம்.

பாவ நிவாரண நாள் சபைக்கு பாடுகளும் சோதனைகளும் நிறைந்த நாள். கர்த்தர் சபையினரை  பூரணத்துடன் வழிநடத்தும் நாள். சங்கீதம்: 119:67,71 - "நான் உபத்திரவப்படுமுன் வழி தப்பி நடந்தேன்", "நான் உபத்திரவப்பட்டது நல்லது; அதனால், உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்ளுகிறேன்."

பாவ நிவாரணத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி உபவாசத்திலிருந்து தங்கள் ஆத்துமாக்களை பாடுகளுக்குட்படுத்தினார்கள். அப்போஸ்தலர்: 27:9- ல் கூறப்பட்டுள்ள உபவாசம் பாவ நிவாரண தினத்தில் குறிப்பிடப்படுகிறது.

6. ஒரு ஓய்வு நாள்: (லேவியராகமம்: 16:31)

தொடரும்...


டிசம்பர் 15, 2012

கிறிஸ்துமஸ் சாப்டுவேர் 5

   கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தேவையான அழகிய அலங்கார மென் பொருள, உங்கள் விருப்பத்தை   நிறைவேற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 4 எம்.பி கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில் 5 விதமான சாப்ட்வேர்கள் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..இனி அதில ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கிறிஸ்மஸ் மரம்:- 

இந்த சாப்ட்வேரினை இன்ஸ்'டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.இதில் 20 விதமான கிறிஸ்மஸ்மரங்கள் உள்ளது. 




 இதில் உள்ள மரத்தில் கர்சர்வைத்து ரைட் கிளிக் செய்ய உங்களுக்கு தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான ஐகானை வைத்துக்கொள்ளலாம். மேலும் நீங்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையோ அரைமணிநேரத்திற்கு ஒரு முறையோ அலாரம் அடிப்பதுபோல் செட் செய்துகொள்ளலாம். பாண்ட் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------------------------------- 
விஸ்டா கிளாக்:-

நேரத்தினை நாம் விதவிதமான கடிகாரம் மூலம் அறிந்துகொள்ளலாம்.உலக நேரத்தினை நாம் செட் செய்துகொள்ளலாம்.மேலும் இதில Clock.Coutdown,Uptime.StopWatch.மற்றும் Timer இதில் செட் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.


------------------------------------------------------------------------------------------------------------

SANTA COUNTDOWN:-

கிறிஸ்மஸ் என்றாலே கிறிஸ்மஸ்தாத்தா தான் நினைவுக்கு வருவார். கிறிஸ்மஸ் தாத்தா விதவிதமான உடைகளிலும் அவரின் தொப்பியிலும் என 20 க்கும் மேற்பட்ட பொருட்களில் நாம் கடிகாரத்தினை செட்செய்துகொள்ளலாம். இதிலும் அரை மணிநேரத்திற்கு ஒரு முறையும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையும் அலாரம் அடிக்கும் வசதி உள்ளது. குழுந்தைகளுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியுடன் விளையாடுவார்கள்.




 -----------------------------------------------------------------------------------------------------------
SNOW GLOBE COUNTDOWN:-

விதவிதமான கண்ணாடி குடுவைக்குள் விதவிதமான கிறிஸ்மஸ் மரங்களை வைத்து கவுண்டவுன் டைம் வைத்துள்ளார்கள்.இதிலும் 9 விதமான கிறிஸ்மஸ் சம்பந்தமான பொருட்களை வைத்துள்ளார்கள்.

 ------------------------------------------------------------------------------------------------------------
ZONE CLOCK:-

ஒரே விதமான கடிகாரம் வைத்துள்ளார்கள்.எங்கு வேண்டுமோ அங்கு நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்




இந்த அனைத்துவிதமான 5 IN 1 சாப்ட்வேர்கள் பற்றி அறிந்:து:கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
அனைத்தையும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

நன்றி: வேலன்

டிசம்பர் 14, 2012

23 வெவ்வேறு பணிகள் - ஒரே சாப்டுவேரில்

கம்பியூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்.."பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ்" என்று கிராமங்களில்  சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை நாம் கம்பியூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல் செயல்பட்டுகொண்டுஇருக்கும்.பிரச்சனையில்லாமல் கம்பியூட்டரை செயல்படுத்துவது எவ்வாறு? இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில நமது கம்பியூட்டருக்கு மிகமிக தேவையான 23 வகை பணிகளுக்குண்டான சாப்ட்வேர்கள் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஐ கான்களில் நமக்கு எந்த வேலை செய்ய வேண்டுமோ அதற்குண்டான ஐகானை கிளிக செய்ய உங்களுக்கு அதற்கான விண்டோ திறந்து கம்பியூட்டரில் பணி செய்யும். இனி இந்த ஐகான்கள் ஒவ்வொன்றும் எவவாறு பயன்படுகின்றது என பார்க்கலாம். 

1. DISK CHECK:-

நமது கம்பியூட்டரில் உள்ள ஹார்ட்டிஸ்கினை சோதனை செய்ய இது உதவுகின்றது. நாம் நமது ஹார்ட்டிஸ்கினை மூன்று முதல் ஆறு வரையிலும் (சிலர் அதற்கும் அதிகமாக) பார்டீஸியன் செய்துவைத்திருப்பார்கள்.நமககு எந்த டிரைவ் தேவையோ அல்லது மொத்த டிரைவினையுமோ தேர்வு செய்துகொள்ளுங்கள். இதில் உள்ள Scan பட்டனை கிளிக் செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்பிற்கு பின் ஹார்டிஸ்கினுள் உள்ள தேவையற்றவைகளை நீக்கி நமக்கு ஹார்டிஸ்க் புதுப்பித்து தருகின்றது.

 2.UNINSTALLER:-

கம்பியூட்டரில் நாம் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வது மிக சுலபம். ஆனால் அதனை அன்இன்ஸ்டால் செய்வது மிக கடினம். முறையாக செய்வதனால் Start - Settings - Control Panel -Add and Remove சென்று தேவையற்ற சாப்டவேரினை கண்டுபிடித்து நீக்க வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரின கீளிக் செய்ததும் நம்மை நேரடியாக Add and Remove விண்டோவில் உள்ள சாப்டவேரின் பகுதிக்கொண்டு செல்லும்.இதில் நமது கம்பியூட்டரில் உள்ள அனைத்து சாப்ட்வேரும் நமக்கு தெரியவரும்.தேவையற்ற சாபட்வேரினை நாம் எளிதாக நீக்கிவிடலாம்.மேலும் இதில் உள்ள கூடுதல் வசதி என்னவென்றால் முக்கியமான அப்ளிகேஷன் சாப்ட்வேருக்கு முன் ஆங்கில யு போன்ற U சிம்பல் கிடைக்கும். டெலிட் செய்யும்முன் கவனித்து நாம் அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

3. STARTUP MANAGER:-

சிலர் கம்பியூட்டரை ஆன்செய்துவிட்டு டீ -காபி சாப்பிட்டுவர வெளியில் சென்றுவருவார்கள்.ஏன் என்றுகேட்டால் கம்பியூட்டர் ஆன்ஆகி டெக்ஸ்டாப் வருவதற்கு அவ்வளவு நேரமாகும் என்று குறிப்பிடுவார்கள்.அதற்கு முக்கியகாரணம் தேவையில்லாத ப்ரோகிராம்களை நாம் நமது கம்பியூட்டரை ஸ்டார்ட்  செய்கையில் வைத்துஇருப்பதுதான். சில சாப்ட்வேர்கள் நாம் இன்ஸ்டால் செய்கையில் தானாகவே அதுபோல் ஸ்டார்அப்பில் சென்று அமரந்துகொண்டு நாம் கம்பியூட்டரை ஆன்செய்கையில் தானாக ஆன்ஆகிவிடும் தன்மைகொண்டதாக இருக்கும்.இதனை தவிர்க்க இந்த சாப்ட்வேரின் ஐகானை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். இதில் தேவையான ப்ரோகிராம் எதிரில் உள்ள கட்டத்தில மட்டும் டிக் மார்க்செய்துவிட்டால் போதும். நமக்கு தேவையான ப்ரோகிராம் மட்டும் ஓப்பன் ஆவதுமட்டுமில்லாமல் கம்பியூட்டரை விரைந்து திறக்கும். 

 4. SERVICES MANAGER:-

நமது கம்பியூட்டரில் உள்ள அப்ளிகேஷன்களை செயல்படுத்தவும் நிறுத்திவைக்கவும் இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. இதனை கிளிக் செய்ததும் நமக்கு நம்து கம்பியூட்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷ்களும் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்து அதனை தேவையானால் நிறுத்திவைக்கவும் செயல்படுத்தவும் முடியும்.

5.DISK CLEANER:-

வீடாகட்டும் நமது அலுவலகமாகட்டும் தேவையில்லாதை நீக்கி ஒழுங்காக அடுக்கிவைத்தால்தான் பார்க்க அழகாக இருக்கும். அதுபோல் கம்பியூட்டரின் ஹார்ட்டிஸ்கில் தேவையில்லாதவைகளை நீக்கி அடிக்கடி சுத்தம் செய்தால் விரைவாக செயல்படுவதுடன் நீண்ட காலம் நமக்கு ஹார்டிஸ்க் உழைக்கும். இதனை செயல்படுத்த இந்த ஐகானை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான டிரைவினையோ அல்லது மொத்த டிரைவினையோ தேர்வு செய்யுங்கள்.பின்னர் இதில் உள்ள Scan கிளிக் செய்யுங்கள. நீலநிற கட்டங்கள் உங்களுக்கு ஓட ஆரம்பிக்கும்.
 சில நிமிட காத்திருப்புக்கு பின்னர் கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் நீக்கப்பட்ட ஜங்க் பைல்களையும் அதனனால் நமது ஹார்ட்டிஸ்கில் கிடைத்த காலி இடத்தையும் நமக்கு காண்பிக்கும்..

6. DELETE EMPTY FOLDERS.

சில அப்ளிகேஷன்களை ஓப்பன்  செய்கையிலும் - சில போல்டர்களை ஓப்பன் செய்கையிலும் தானாக Empty Folders கிரியேட்டாகிவிடும். அவ்வாறு சில நாட்களில் சேரும் போல்டர்கள் இடத்தை அடைத்துக்கொண்டு நாம் கம்யூட்டரில் பணிசெய்கையில் நமக்கு இடஞ்சலாக இருக்கும். அவ்வாறான Empty Folders களை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்து இதில் உள்ள Scan பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு நீல நிற லைடர் ஓட ஆரமபிக்கும்.பிறகு உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் Empty Folders எது எது உள்ளதோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.அனைத்தையும் Select செய்து டெலிட் செய்துவிடவும்.

7. FIX SHORTCUTS:-

 நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கு நாம் Shortcut உருவாக்கிகொள்ளலாம்.இதனை நாம் உருவாக்க இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டிரைவினை கிளிக் செய்யவும்.சில நிமிடங்களுக்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும.
தேவையானதை தேர்வு செய்துபின்னர் ஓ.கே.கொடுங்கள்.

8. REGISTRY CLEANER:- 

நாமாக ரீஜெஸ்டரியை சுத்தம் செய்கையில் சில நேரங்களில் தெரியாமல் பைல்களை டெலிட்செய்திட கம்பியூட்டர் வேலைசெய்யாமல் இருந்துவிடும். ஆனால் இந்த சாப்ட்வேர் மூலம் செய்கையில் அந்த கவலை நமக்கு இல்லை.இதனை பயன்படுத்த இந்த ஐகானில் கிளிக்செய்யவும.உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Defrag கிளிக் செய்திட சில நிமிடங்களில் உங்களுடைய ரிஜிஸ்டரி டீபிராக் ஆகிவிடும்.

9. REGISTRY DEFRAG:-

ரிஜிஸ்டரை டிபிராக் செய்திட இந்த ஐகானை கிளிக் செய்திடவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Scan கிளிக் செய்திடவும்.
சில நிமிடங்களில் ரீஜிஸ்டரி டீபிராக் ஆகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.
10.DEFRAG:-
வழக்கமாக நாம் டீ பிராக் செய்யவேண்டும் என்றால் நாம் Start-Programme -Accessorics-Systemtools-Defrag-என முறையாக சென்று டீபிராக்மெண்ட் செய்யவேண்டும். ஆனால்இந்த சாப்ட்வேரில் இதனுடைய ஐகானை கிளிக் செய்தால் நமக்கு நேரடியாக டீபிராக் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

11. DUPLICATE FILE FINDER:-

புகைப்படங்களாகட்டும் பைல்களாகட்டும் வீடியோபைல்களாகட்டும் சில சமயம் நாம் ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் காப்பி செய்துவிடுவோம்.இவ்வாறு ஒரேவிதமான பைல்கள்இரண்டு  மூன்று இடங்களில் இருக்கும். நாம் ஒரே மாதிரியான பைலினை கண்டுபிடித்து டெலிட் செய்திட இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. இதனை செயல்படுத்த இந்த ஐகானினை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் தேவையான டிரைவினை தேர்வு செய்து Scan கிளிக் ;செய்திட சில நிமிடங்களில் உங்களுக்கு Duplicate File Finder விண்டோ கிடைக்கும.


 மேலும் எவ்வளவு பைல்கள் அதனை நீக்குவதால் கிடைக்கும் இடமும் நமக்கு தெரியவரும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

12. DATA RECOVERY:-

சிடி மற்றும் டிவிடிகளை கவனமாக கையாளவிட்டால் நாளடைவில் அதில் கிராச் விழுந்துவிடும்.பின்னர் அதனை பயன்படுத்துவது கடினம். குழந்தைகள்இருக்கும் வீட்டில் குழந்தைகள் சிடியை எடுத்து தரையில் தேய்தாலும் அவ்வாறு கீரல்கள் விழுந்து சிடி பழுதாகும. அவ்வாறான சிடியில் உள்ள தகவல்களை படித்து தனியே ஹார்டிஸ்கில் சேமித்துவைக்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. ஐ கானை கிளிக் செய்து இந்த சாப்ட்வேரினை தேர்வு செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் பழுதான சிடியில் உள்ள தகவல்களை  சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.ஓ.கே தரவும். அவ்வளவுதான் பழுதான சிடியில் உள்ள தகவல்கள்சேமிக்கப்பட:டுவிடும்.

13. DISK FILES:-

திரைப்படங்கள.பாடல்கள்.புகைப்படங்கள்.டாக்குமெண்ட்கள்..சிப் செய்த பைல்கள் என டிரைவில் நாம் நிறைய சேமித்துவைத்திருப்போம். ஒவ்வொன்றும் எவ்வளவு உள்ளது எவ்வளவு கொள்ளளவு கொண்டது என இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.இந்த வசதியை பெற இந்த ஐ கானை கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில தேவையான டிரைவினை தேர்வு செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்பில் உங்களுக்கு உங்கள் டிரைவில் உள்ள ஆடியோ.வீடியோ.இமேஜ்.டாக்குமெண்ட்.சிப் பைல்கள்என அனைத்துவிவரங்களும் தெரியவரும்.
கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ஒவ்வொரு பைல்களின் விவரங்களும் தெரியவரும்.அதன் மூலம் நாம் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ளலாம்.



14. GAMING PC:-

விளையாட்டு பிரியர்களுக்கான சாப்ட்வேர் இது. இதில் விளையாட்டினை மேம்படுத்துவதுடன் கம்பியூட்டர் திறனையும் மேம்படுத்தும. இதில் நாம் நமது கம்பியூட்டரில் உள்ள விளையாட்டினை தேர்வு செய்து ஓ,கே தரவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

15. PARMANENT DELETE:-

சில தகவல்கள் ரகசியமானதாக இருக்கும.அதை நாம் சாதாரணமாக பயன்படுத்ததிவிட்டு டெலிட் செய்துவிடுவோம். ஆனால் ஒரு சில சாப்ட்வேர்க்ள் மூலம் நமது தகவல்களை மற்றவர்கள் எளிதில் ரெகவரி செய்து பார்த்துவிடலாம். அவ்வாறு மற்றவர்கள் நமது தகவல்களை பார்க்கவேண்டாம் என நீங்கள் விரும்பினால் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்ததவும். இந்த சாப்ட்வேர் மூலம் நாம் டெலிட் செய்தால் எந்த சாப்ட்வுர்  மூலம் மீண்டும் தகவல்களை கொண்டுவர முடியாது.இந்த ஐகானை கிளிக் செய்து தேவையான டிரைவினையோ அல்லது பைல்களையோ தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள Parmanent Delete  கிளிக் செய்ய உங்களுக்கு எச்சரிக்கை செய்திவரும்.ஓ.கே.கொடுங்கள்.மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என நீங்கள் நினைக்கும் அப்ளிகேஷனை டெலிட்செய்துவிடும்.

16. WIPE DISK:-

மழைகாலங்களில் நான்கு சக்கர வாகனங்களில் முன்னாடி உள்ள கண்ணாடியை துடைக்கும் வைபரை பார்த்திருப்பீர்கள். மழைத்துளி இல்லாமல் கண்ணாடியை சுத்தமாக துடைத்து சாலையை தெளிவாக பார்க்க முடியும்.அதுபோல கம்பியூட்டரின் ஹார்ட்டிஸ்கில் உள்ள காலியாக போல்டர்களை நீக்கி ஹார்டடிஸ்கின் இடத்தினை கூடுதலாக்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது.நீங்கள் இதனுடைய ஐ கானை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. தேவையான டிரைவினை தேர்வு செய்து இதில் உள்ள Wipe Disk Free Space கிளிக் செய்திட தேவையற்ற பைல்களை நீக்கி உங்களுடைய கணிணியில் உள்ள டிரைவில் கூடுதல் இடம் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்.

17. SHUTDOWN TIMER:-

நமது கம்பியூட்டரை Shutdown.Restart.Sleep.Hibernate.Log Off.Lock.Open File.Open Webpage என பலவிதமான டாஸ்க்கை இதில் கொண்டுவரலாம். இதனை செய்ல்படுத்த இந்த ஐ கானை ககிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.குறிப்பீட்ட நேரத்தில் கம்பியூட்டரை ஆப் செய்வதற்கும். ரீ ஸ்டார் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதில் உள்ள நேரத்தை செட் செய்தால் போதுமானது. மேலும் இணைய தளம் குறீப்பிட்ட நேரத்தில் நாம் திற்க்க வேண்டுமானாலும் அதற்கும் இதில் நேரம் செட் செய்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில இணையதளம் ஓப்பன் ஆகும்.மேலும் கூடுதல் வசதியாக மவுஸோ,கீ போர்டோ செயல்படாமல் இருந்தாலும் தானே ஆப் ஆகிவிடுமாறு செய்யலாம்.அதுபோல் CPU வின் உபயோகம் குறிபிட்ட சதவீதத்திற்கு மேல் குறிப்பிடட நேரம் அப்படியோ இருந்தாலும் கம்பியூட்டரை ஆப் செய்துவிடலாம். அதனைப்போலவே ஹார்டிஸ்கும் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படாமல் இருந்தாலும் ஆப் ஆகிவிடுமாறு செட் செய்திடலாம்.நமக்கு வேண்டிய வசதியை தேர்வு செய்து Add Schedule கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடட பணியை செவ்வன செய்யும்.



18. SPLITTER:-

சில பெரிய பைல்களை வேண்டிய அளவிற்கு ஸ்பிலிட் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பெற இதனுடைய ஐ கானை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பிரிக்க விரும்பும் பெரிய பைலை தேர்வு செய்யவும். பின்னர் அதனை சேமிக்க விரும்பும இடத்தினையும் தேர்வு செய்யவும். அதற்கு அடுத்து பைல்கள் எவ்வளவு எம்.பியில் பிரிக்க வேண்டுமோ அதனுடைய அளவினை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள Split Now கிளிக் செய்திட உங்கள் பைலானது நீங்கள் விரும்பிய அளிவில் பிரிந்திருக்கும்.இதில் உள்ள சாப்ட்வேரினை பயன்படுத்தி இதனை மீண்டும ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம்.



19. DELETE HISTORY:-

-சிலர் கம்பியூட்டர பயன்படுத்தியவுடன் ஆப் செய்துவிட்டு சென்றால் அவர் கம்பியூட்டரில் என்ன என்ன பார்த்தார். என்ன பணி  செய்தார் என சுலபமாக History பார்த்து தெரிந்துகொள்ளலாம்.எந்த எந்த இணைய பக்கங்களை அவர் பார்த்தார் என அறிந்துகொள்ளலாம். நாம் பயன்படுத்தும் இணைய தளம்.மற்றும் பைல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டாம ;என விரும்பினால் ;இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி நமது History முழுவதையும் காணாமல் செய்துவிடலாம்.இதனை பெற இந்த ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Scan கிளிக் செய்திட முழுவிவரங்களும் கிடைக்கும்;தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து இதில் உள்ள Delete Now கிளிக் செய்தால் உங்கள் History முழுவதும் காணாமல் போய்விடும்.



20. BATCH FIX:-

இந்த சாப்ட்வேரில கொடுக்கப்பட்டிருக்கும் சில சாப்ட்வேர்களை நாம் ஒவ;வொரு டிரைவிற்கும் தானே Scan செய்வதுபோல Fix செய்யலாம்.. இதில் Disk Chek.Disk Cleaner.Delete History.Delete Empty Folders.Fix Shortcuts.Registry Cleaner.Registry Defrag.Wipe Disk போன்ற பணிகளை செய்வதற்கு செட்சேய்துவிடலம். நீங்கள் இதில எந்த எந்த பணிகளை எந்த எந்த டிரைவில் செய்யவிரும்புகின்றீர்களோ அந்த டிரைவின் எதிரிலும் அந்த அந்த அப்ளிகேஷன் எதிரிலும் உள்ள கட்டத்தில் டிக் மார்க் செய்து Fix செய்துவிடலாம்.கீழே உள் ள விண்டோவில் பாருங்கள். 

21. MAINTENANCE WIZARD:-

Disk Check.Unistaller.Starup Manager.Service Manager.Disk Cleaner.Delete Empty Folders.Fix Shotcute.Registry Cleaner.Registry Defrogment.Defrogment..போன்ற பணிகளை இதில் செட் செய்துவிட்டால் குறிப்பிடட நேரத்தில் இது தானே இத்தகைய பணிகளை செய்துவிடும். இதனை பெற இதனுடைய ஐகானை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். இதில் Start Wizard கிளிக்செய்து இதனுடைய வசதியை பெறலாம்.

22. MINIMAL PC:-

நமது கம்பியூட்டரில் உள்ள அப்ளிகேஷன்களின் சர்வீஸை  தொடரவும் நிறுத்திவைக்கவும் இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. இதனுடைய ஐகானை கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.தேவையான அப்ளிகேஷனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

23. SYSTEM INFORMATION:-

நமது கம்பியூட்டரில் உள்ள சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் விவரங்களை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய ஐ கானை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில் தேவையான விவரம் கிளிக் செய்திட அதனுடைய முழுவிவரமும்இடதுபுறம் உள்ள விண்டோவில் தெரியவரும்.கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இந்த அனைத்து சாப்ட்வேரினையும் பெற நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.
மேலும விவரங்கள் அறிந்துகொள்ளவும் இதன் இணையதள முகவரியை காணவும் இங்கு கிளிக் செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

நன்றி: வேலன்