ஆகஸ்ட் 12, 2012

சாது சுந்தர் சிங் (1889 - 1929)


 
"அறிந்த முகம் ,அறியாத செய்தி" 
சாது சுந்தர் சிங் 1889-ம் ஆண்டு நாட்டில் உள்ள பஞ்சாப் மாகணத்தில் ஷேர்சிங் என்பவருக்கும் அவரது துணைவியாருக்கும் மகனாய் பிறந்தார்.

அவர் சிறுவனாக இருக்கும்போதே அவரது தாய் சீக்கிய மதத்தின் கிரந்தங்களை அவருக்கு நன்கு போதித்து சீக்கிய மதத்தில் பக்தி வைரகியமுள்ள ஒரு வாலிபனாய் வளர்த்தார்.

அவருடயை ஊரில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் அவர் கல்வி பயின்ற காலத்தில் ஏனோ கிறிஸ்துவ மார்கத்தின் மீது வெறுபுள்ளவராக காணப்பட்டார்.

அவருடைய 12வது வயதில் தாய் மரித்த பின்பு அவருடைய நல்ல குணங்கள் மாறி வெறுபுள்ளவராய்.

ஒரு நாள் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை விலை கொடுத்து வாங்கி ,நண்பர்களுடன் கூடி புத்தகத்தை கிழித்து தீயிலிட்டு கொளுத்தி மகிழ்ந்தனர் ,இன்னொரு நாள் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் தொழுது கொண்டிருக்கும் பொது மாட்டு சாணத்தை சன்னல் வழியாக உள்ளே எறிந்துவிட்டு ஓடிவிட்டார்.

இவைஅனைத்தும் செய்த போதும் மனதில் நிம்மதி அற்றவராகவே காணப்பட்டார் .

ஒரு நாள் இரவில் கடவுள் ஒருவர் உண்டானால் அவர் தம்மை எனக்கு காண்பிக்கட்டும்.அப்படி இல்லாவிட்டால் அதிகாலையில் என் உயிரை மாய்த்து கொள்வேன் என்று தீர்மானம் எடுத்துகொண்டார் . அந்த இரவில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னை அவருக்கு காண்பித்தார் ,அன்று முதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரை எங்கும் சாட்சியாக கூறி வந்தார் .


அவர் இயேசுவை ஏற்றுகொண்டதின் நிமித்தம் ஒரு நாள் அவருடைய குடும்பத்தினர் அவருக்கு கொடிய விஷத்தை உணவில் கலந்து கொடுத்து வீட்டை விட்டு துரத்தி விட்டனர் ,அவரோ தன்னுடைய கிறிஸ்தவ நண்பன் வீட்டின் வாசலில் போய் மயங்கி விழுந்து விட்டார் ,அவருடய நண்பன் அவரை மருத்துவரிடம் அழைத்து சென்றார் .அந்த கொடிய விஷத்தை உண்டவர் பின்பும் உயிரோடு இருப்பதை கண்ட மருத்துவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்.


இந்திய மட்டுமல்லாமல் இங்கிலாந்து,அமெரிக்க,ஐரோப்பா போன்ற பல வெளிநாடுகளுக்கும் சென்று இயேசு பற்றி பிரசங்கம் செய்து இந்தியாவின் மதிப்பை வெளிநாடுகளில் உயர்த்தினார்.


உறைபனி மிகுந்த மலைகளிலும்,கரடுமுரடான காடுகளிலும் செருப்பு எதுவும் அணியாமல் வெறும் கால்களுடன் நடந்து சென்று ரத்தம் வடிந்து கொண்டிருக்கும் நிலையிலும் இயேசுவுக்கு ஊழியம் செய்ததால்,ரத்தம் வடியும் கால்களுடைய இயேசுவின் சீடன்என்று மக்கள் அவருக்கு பெயரை சூடினர்.


இவர் 1929-ஆம் ஆண்டு திபெதில் வைத்து இயேசுவின் திருவடி சேர்ந்தார் .

இவரை பற்றி என்னுடய கருத்து என்னவென்றால் ---- யோவான்,பவுல் இவர்களுக்கு பிறகு இயேசுவின் முழுமையான அன்பை இந்த உலகத்திற்கு பிரதிபலித்தவர் சாது சுந்தர் சிங் ஐயா மட்டுமே.

இந்த காலத்தில் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பல சாது சுந்தர் சிங்கை இந்தியாவில் இருந்து எழுப்ப காத்து கொண்டிருக்கிறார்,ஒரு வேளை இந்த Article-லை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் கூட அந்த நபராக அல்லது அந்த இயேசுவின் அன்பை பிரதிபலிக்கிற சீடனாக இருக்கலாம்.


இயேசுவின் அன்பை முற்றிலுமாக உணரவேண்டும் என்றால் யோவான் எழுதிய சுவசேஷ பகுதியை திரும்ப திரும்ப படியுங்கள் அதில் இயேசுவின் முழுமையான அன்பையும்,அவரின் இதய துடிப்பையும்,அவருடைய இதயத்தின் ஏக்கத்தையும் நீங்கள் உணர்ந்து,நீங்களும் அதை பெற்று கொள்ளலாம்.
 
நன்றி: முகநூல்